02 செப்டம்பர் 2020

சுரைக்காய் பிரியாணி


                                     

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி -1/2 கி 
சுரைக்காய் -1/4கி 
பெரிய வெங்காயம் -4
தக்காளி -4
பச்சை மிளகாய் -3
இஞ்சி ,பூண்டு விழுது -1டீஸ்பூன் 
சோம்பு -1/4டீஸ்பூன் 
பிரிஞ்சி இலை -1
பட்டை ,கிராம்பு -1
மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் -1டீஸ்பூன் 
முந்திரி -6
கரம் மசாலா பொடி -1/2டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு 
நெய் -தேவையான அளவு 
கொத்தமல்லி -சிறிதளவு 
உப்பு -தேவையான அளவு 

செய்முறை 

பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும் .பின் குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்புஏலக்காய் ,பிரிஞ்சி இலை,சோம்பு சேர்த்து தாளிக்கவும் .
பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் .வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி ,பூண்டு விழுது சேர்க்கவும் .
அதன்பிறகு பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும் .தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள் ,கரம் மசாலா ,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் .மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .பின் சுரைக்காயை சேர்த்து வதக்கவும்.
பின் அரிசியை சேர்க்கவும் .தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் .தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவைக்கவும் .
பின் விசில் வைத்ததும் இறக்கி நெய்யில் முத்திரியை வதக்கி சேர்க்கவும் .கடைசியில் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும் .சுவையான சுரைக்காய் பிரியாணி ரெடி .


0 கருத்துகள்:

கருத்துரையிடுக