09 செப்டம்பர் 2020

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

                                            

தேவையான பொருட்கள் :

சீரக சம்ப அரிசி -1கி 

வெள்ளாட்டுக் கறி -1கி 

நெய் -50கி 

மிளகாய்த்தூள் -1டீஸ்பூன் 

பூண்டு -100கி 

இஞ்சி -100கி 

சின்ன வெங்காயம் -100கி 

ஆயில் -100கி 

தயிர் -ஒரு கப் 

புதினா ,கொத்தமல்லி -ஒரு  கைபிடி 

எலுமிச்சைபழம் -1

மசாலா பொருட்கள் :

பச்சை மிளகாய் -3

ஏலக்காய் ,பட்டை ,கிராம்பு ,ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,இஞ்சி 

செய்முறை :

சமைக்கத் தொடங்குவதற்கு முன், அரிசியை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பூண்டை நசுக்கவும். சிறிய வெங்காயத்தை  தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில்  நசுக்கவும். பச்சை மிளகாய் ,ஏலக்காய் ,பட்டை ,கிராம்பு ,ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,இஞ்சி   அனைத்து பொருட்களையும் மிக மென்மையான பேஸ்டில் அரைக்கவும். அரைக்கும் போது 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். 

ஒரு கனமான வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி அரைத்த  மசாலா பேஸ்ட், நசுக்கிய  பூண்டு மற்றும் நசுக்கிய வெங்காயம் சேர்க்கவும். கலவையிலிருந்து எண்ணெய் பிரிக்கும் வரை ஒரு  10 நிமிடங்களுக்கு நடுத்தர தீயில் வதக்கவும் .பின் கறியை சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை  வதக்கவும் . பின் மிளகாய் தூள்  சேர்க்கவும். இப்பொழுது உப்பு சேர்க்கவும் .பிறகு 5லிட்டர் தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும் .நன்கு கொதித்த பிறகு ஊறவைத்த அரிசியை போட்டு கிளறி விடவும் .முக்கால் பதம் வெந்தவுடன் தயிர் ,எலுமிச்சை சாறு சேர்க்கவும் . 

பிறகு சிறிதளவு நெய் விட்டு அரிசி உடையாமல் கிளறி விடவும் .இப்போது அடுப்பை சிம்மில் வைத்து பிறகு பிரியாணி பாத்திரத்தை டைட்டாக மூடவும் .மூடியின் மீது நெருப்பு துண்டுகளை வைத்து அரை மணி நேரம் தம் போடவும் சிறிது நேரம் கழித்து திறந்து கொத்தமல்லி ,புதினா இலை தூவி பரிமாறவும் .சுவையான திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி ரெடி 


 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக