22 செப்டம்பர் 2020

கிராமத்து கோழிக்குழம்பு



தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி – 1 கிலோ

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 4

இஞ்சி – சிறிதளவு

பூண்டு – 15 பல்

கொத்துமல்லித்தழை,

கறிவேப்பிலை,

நல்லெண்ணெய் – தேவைக்கு ஏற்ப

தேங்காய் துருவியது – அரை கப்

வர மிளகாய் – 8

கசகசா – 2 ஸ்பூன்

மல்லி – 1 ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

ஏலக்காய் – 3

கிராம்பு – 3

பட்டை – சிறு துண்டு

சோம்பு – ஒரு ஸ்பூன்

ஜாதிக்காய் – அரைத் துண்டு

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

செய்முறை 

 கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுதுண்டாக நறுக்குங்கள். இஞ்சியை சீவி, சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்குங்கள். அதேபோல் பூண்டை தோலுரித்து சிறிதாக வெட்டிக் கொள்ளலாம். 

ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வரமிளகாய், கிராம்பு, பட்டை, மல்லி விதை, துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து சிவக்குமளவில் வறுத்துக் கொள்ளுங்கள். 

பின்பு இதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் வறுத்து வைக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள்  ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுது போல அரைக்கவும். 

மறுபடியும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்கவும் . 

வதங்கும் போதே அதனுடன் நறுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளி சேர்த்து வதக்கவும் , தக்காளி நன்கு வதங்கிய பிறகு  அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

 பின் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதுகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் . அடுத்தது இதனுடன் வெட்டி வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும். 

தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். கரிவெந்ததும் அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றை கலக்க விடுங்கள். பின்பு உப்பு தேவையான அளவு சேர்த்து கலக்கி10 நிமிடம் மூடி வையுங்கள் . கோழி நன்றாக வெந்திருந்தால் மிருதுவாக இருக்கும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து நறுக்கிய கொத்துமல்லித் தழையை சேர்த்து 1 நிமிடம் மூடி வையுங்கள். 

இப்போது சுவையான கிராமத்து கோழிக்குழம்பு தயார் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக