தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி -ஒரு கப்காஞ்ச மிளகாய் -20
இஞ்சி -1 டீஸ்பூன்
பூண்டு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி தண்டு- 1 டீஸ்பூன்
வினிகர்- 3 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
சர்க்கரை -1 டீஸ்பூன்
மிளகு- தேவையான அளவு
குடைமிளகாய்- 1
எலும்பில்லாத சிக்கன்- 200 கிராம்
முட்டை- 3
வெங்காயத்தாள்- சிறிதளவு
சிக்கன் செஜ்வான் ரைஸ் செய்வது எப்படி
20 காய்ந்த மிளகாயை வெந்நீரில் ஊறவிடவும்.இதனை நன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
உடன் அந்த அரைத்த விழுதினை சேர்க்கவும்.அத்துடன் உப்பு, சர்க்கரை, வினிகர் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.அத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும் .
நெருப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். அப்படி செய்யும் போது அது வத்தி சாஸ் பதத்துக்கு வந்துவிடும்.முட்டையை தனியாக வறுத்து வைத்திருக்கவும்.சிறிது எண்ணெய் சேர்த்து பாதியளவு சிக்கனை பொரித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுடன் உப்பு சேர்த்து ஒரு கப் அரிசி சேர்த்து வேக விடவும்.ஒரு அடி கெட்டியான கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அத்துடன் பூண்டு,இஞ்சி,2 காய்ந்த மிளகாய்,கேப்ஸிகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
சிக்கனை சேர்த்து நன்றாக வேகவிடவும் மிளகு தூள்,3 டேபிள்ஸ்பூன் செஸ்வான் சாஸ் நன்றாக கலந்து விடவும்.அத்துடன் வேக வைத்த அரிசி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
நெருப்பை அதிக தீயில் வைத்து நன்றாக வறுக்கவும்.வறுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.கடைசியாக வெங்காயத்தாள் தூவி விட்டு இறக்கவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக