07 செப்டம்பர் 2020

அறும் சுவையையும் ஒருங்கே கொண்ட வேப்பம் பூ பச்சடி

                                    Veppam Poo Pachchidi

தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ -ஒரு கைபிடி அளவு

மாங்காய் -சிறிதளவு

புளி -நெல்லிக்காய் அளவு

மிளகாய் வற்றல் -4

பெருங்காயம் -1 சிட்டிகை

கடுகு -சிறிதளவு

வெல்லம் -1 ஸ்பூன்

எண்ணெய் -தேவையான அளவு

கறிவேப்பில்லை -சிறிதளவு 

செய்முறை :

புது வேப்பம்பூவை இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ கொத்துக்களை ஒரு முறத்தில் போட்டு தேய்த்து எடுத்தால், வேப்பம்பூ இதழ்கள் மட்டும் தனியாக வந்து விடும். மாங்காயை தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கவும். வெல்லத்தை துருவிக் கொள்ளவும். கோலிக் குண்டு அளவு புளியை, ஒரு டம்ப்ளர் தண்ணீரில், ஊற வைத்து கரைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய்   ஊற்றி, கடுகு, கிள்ளிய வர மிளகாய், பெருங்காயம் போட்டு, கடுகு வெடித்ததும் வேப்பம்பூவையும் போட்டு பொரிக்கவும். கரைத்து வைத்த புளியை ஊற்றவும். புளி தண்ணீர் கொதித்தவுடன், உப்பு, மாங்காய் துண்டுகளை சேர்க்கவும். மாங்காய் வெந்து கரைந்த பின் துருவிய வெல்லத்தையும் சேர்க்கவும். வெல்லம் கரைந்து, மாங்காயுடன் சேர்ந்து கெட்டியாகி, பச்சடி பதம் வந்தபின் அடுப்பை அணைத்து விடவும். இப்போது வேப்பம்பூ பச்சடி பரிமாற தயார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக