ஊறவைத்த மசாலா கோழி கறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊறவைத்த மசாலா கோழி கறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஏப்ரல் 2020

ஊறவைத்த மசாலா கோழி கறி

                             Easy Chicken Curry Recipe | Cookstr.com       
தேவையான பொருள்கள் :

கோழி கறி -1/2 கி

வெங்காயம்  பெரியது -1

தக்காளி -2(விழுதாக அரைத்து கொள்ளவும் )

மிளகாய் தூள் -2 தேக்கரண்டி

மல்லித்தூள் -1தேக்கரண்டி

இஞ்சி ,பூண்டு விழுது -1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

தயிர் -100 கி

உப்பு -தேவையான அளவு

பட்டை -1 துண்டு

கிராம்பு -2

ஏலக்காய் -2

பிரியாணி இலை -1

கரம்மசாலா பவுடர் -1/2ஸ்பூன்

கொத்தமல்லி தலை -சிறிதளவு
செய்முறை :
முதலில் 1/2கி  கோழி கறியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் .

                                                   How to marinate chicken - North Indian Cooking by..Geeta Seth
அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மிளகாய் தூள் ,மஞ்சத்தூள் ,தயிர் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும் .

                                                         Instant Pot Chicken Tikka Masala - Jo Cooks
பின் கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்த வுடன் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் ,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் .
                                                               Sri-Lankan Chicken Curry - Recipes By Sharmistha Dey     
நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
                                                                  Chicken Chinthamani | The Take It Easy Chef
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியை அரைத்து அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் .
                                                                 Pantry tuna pasta with capers and crunchy breadcrumbs | Recipe ...
பின் ஊற வைத்த கோழி கறியை அதனுடன் சேர்த்து வதக்கவும் .பின் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 டம்ளர் நீர் சேர்த்து கிளறி மூடிவைக்கவும் 
                                                                        Andhra Style Chicken Curry | Not Out of the Box     
கறி நன்கு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .கடைசியாக  கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் .
சுவையான மசாலா கோழிக்கறி ரெடி .
                                              Easy Chicken Curry Recipe | Cookstr.com