தேவையான பொருட்கள் :
சாமை அரிசி -2 கப்
தக்காளி -2(பொடியாக நறுக்கியது )
தேங்காய் பால் - 1 கப்
வெங்காயம் – 1 [வெட்டப்பட்டது]
இஞ்சி & பூண்டு - 1 1/2 டேபிள் ஸ்பூன் [மசித்த]
வெந்தயம் விதைகள் – 1 டி பிச்
ஏலக்காய் - 2
பட்டை - 1
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கல் பூ - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் -2 டீஸ்பூன்
நெய் -2 டீஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் - 2
புதினா சிறிதளவு ,
கொத்தமல்லி சிறிதளவு
ஆகிய வற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும் .
செய்முறை :
முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைக்கவும் . குக்கர் சூடானவுடன் எண்ணெயை பிரஷர் குக்கரரில் ஊற்றவும் . பின் அதில் பச்சை ஏலக்காய், சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கல் பூ சேர்த்து வதக்கவும்.
பிறகு, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் அரைத்த கொத்தமல்லி, புதினா கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து, நன்கு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள் , கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு உப்பு மற்றும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு அதில் சமஅளவு அரிசி சேர்த்து, மூடி வைத்து, 3-4 விசில் வரும் வரை வேக விடவும்.கடைசியில் நெய் மற்றும் புதினா இலைகளை த் தூவி இறக்கவும் .
சால்னா குர்மா மற்றும் ரைதாவுடன் சேர்த்து பரிமாறவும் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக