10 செப்டம்பர் 2020

மீன் பிரியாணி செய்வது எப்படி ?How to make Fish Biryani Recipe?

                                        

செய்ய தேவையானா பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 கப் 

ஏலக்காய்  - 4

கிராம்பு  - 4

இலவங்கப்பட்டை  - 1 சிறிய குச்சி

சீரகம்  - 1 தேக்கரண்டி

பிரியாணி  இலை - 2

உப்பு - 3 தேக்கரண்டி

மீன் வறுக்க :

மீன் துண்டுகள் - 1/2 கிலோ (முள் இல்லாத சதை பற்று அதிகம் உள்ள மீனை பயன் படுத்தவும் )

 உப்பு-தேவையான அளவு 

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள்  - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்  - 1 தேக்கரண்டி

சீரகம் தூள்  - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - தேவையான அளவு 

எண்ணெய் - 1/4 கப்

பிரியாணிக்கு:

பிரியாணி இலை - 1

பெரிய வெங்காயம் - 2  மெல்லியதாக வெட்டப்பட்டது

பச்சை மிளகாய் - 3 பிளவு

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள்  - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்  - 1 தேக்கரண்டி

சீரகம் தூள்  - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

தக்காளி - 1  நறுக்கியது

தயிர் - 1 கப்

புதினா இலைகள் - 1/2 கப்  நறுக்கியது

கொத்தமல்லி இலைகள் - 1/2 கப்  நறுக்கியது

 உப்பு-தேவையான அளவு 

செய்முறை :

30 நிமிடங்களுக்கு அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். இப்போது அரிசி உடன் ஏலக்காய் ,கிராம்பு ,இலவங்கப்பட்டை , சீரகம்  பிரியாணி  இலை,உப்பு   சேர்த்து, 90 சதவீதம் சமைக்கும் வரை 8 முதல் 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். அதை ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஒதுக்கி வைக்கவும்.

இப்போது மீனுடன் உப்பு,மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள், சீரகம் தூள் எலுமிச்சை சாறு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும் .இப்போது எந்த பாத்திரத்தில் பிரியாணி சமைக்கிறோமோ அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை பொறித்து எடுக்கவும் .

 மீதமுள்ள எண்ணெயில், பிரியாணி  இலை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். வெட்டப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய உடன் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.இப்போது அனைத்து மசாலா பொடிகளையும்  சேர்த்து 30 விநாடிகளுக்கு வதக்கவும் .பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் .தக்காளி நன்கு வதங்கியவுடன் , புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் தயிரில் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். 

மசாலா முழுமையாக வதங்கும் வரை இதை 5 நிமிடங்கள் சமைக்கவும்.இப்போது பத்தி வேகவைத்த அரிசியுடன் மசாலா கலவையை சேர்த்து கிளறிவிடவும் .மற்றும் மீன் துண்டுகளை அரிசியின் மேல் வைக்கவும்.

இந்த பாத்திரத்தை மூடி அடுப்பில் வைக்கவும் .மூடியின் மீது நெருப்பு துண்டுகளை வைத்து தம் போடவும் .இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும் .5 நிமிடம் கழித்து திறந்து மீன் உடையாமல் கிளறி பரிமாறவும் .


0 கருத்துகள்:

கருத்துரையிடுக