முட்டை - 4
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பெரிய மெல்லியதாக வெட்டப்பட்டது
தக்காளி பேஸ்ட் - 1/2 கப் (2 அரைத்தது )
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2
உப்பு-தேவைக்கு
வறுத்து அரைப்பதற்கு:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதைகள்-2தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை - 1
செய்முறை :
முட்டைகளை முதலில் வேகவைக்கவும் . அவற்றை உரித்துஇரண்டாக வெட்டி தவாவில் வைத்துக் வறுத்து எடுத்துக் கொள்ளவும் .
இப்போது ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். முழு மசாலாப் பொருட்களையும் சேர்த்து 3 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் வறுக்கவும். அவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக மாற்றவும்.
இப்போது ஒரு கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை சூடாக்கவும். கடுகு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இப்போது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இதை 2 நிமிடங்கள் வதக்கவும். இவற்றுடன் சிறிது உப்பு சேர்க்கவும் .வாணலியை ஒரு மூடியால் மூடி மேலும் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும், அதனால் வெங்காயம் மென்மையாகவும் சமைக்கப்படும்.
இப்போது மசாலா பேஸ்ட்டில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலே எண்ணெய் பிரிக்கும் வரை வதக்கவும்.
இப்போது தக்காளி வி ழுதுகளை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
இப்போது சிறிது தண்ணீர் ஊற்றி முட்டைகளில் சேர்க்கவும். கடாயை மூடி, எண்ணெய் மேலே மிதக்கும் வரை 10 நிமிடங்கள் சமைக்கவும்.