03 ஆகஸ்ட் 2020

மாப்பிள்ளை சொதி

     
                                           Delicious Homemade Muringakka Manga Curry. Drumsticks And Mango in Coconut milk gravy with spices, served in a clay pot.Kerala cuisine stock photography

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு - 100 கிராம் 

பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப் 

சின்ன வெங்காயம் - 12 
தேங்காய் - ஒன்று 
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் 
இஞ்சி - சிறிய துண்டு 
பூண்டு - 8 பல் 
பச்சை மிளகாய் - 6, 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லித் தழை - சிறிதளவு 
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் 
நெய்-தேவைக்கேற்ப, 
எண்ணெய்-தேவைக்கேற்ப, 
உப்பு - தேவைக்கேற்ப, 
செய்முறை
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பாசிப் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். 
தேங்காயைத் துருவி அரைத்து, முதலில் வடிகட்டிய பாலைத் தனியாகவும், இரண்டாவதாக வடிகட்டும் பாலைத் தனியாகவும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் இரண்டாம் தேங்காய்ப்பாலை அதில் சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். 
காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங்காய்ப்பாலைச் சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து, சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக