09 டிசம்பர் 2020

சளியை குணமாக்கும் வெண்டைக்காய் சூப் ...

                                                     

வெண்டைக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே, இந்த நீரை அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து அருந்தினால் சளி, இருமல் குணமாகும்

தேவையான பொருட்கள் ;

முற்றிய வெண்டைக்காய் -3 

தக்காளி-1 

பூண்டுப்பல்-3

சின்ன வெங்காயம்-2 

மிளகு-5 

சீரகம்1/4 ஸ்பூன் 

செய்முறை ;

முற்றிய மூன்று வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் . அடுப்பில் ஒரு டம்ளர் நீர் விட்டு சூடேறியதும் வெண்டைக்காயை அதில் இடவும் பின் தக்காளி, பூண்டுப்பல் மூன்று, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகு ஐந்து, கால் டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.நீர்  பாதியாக வற்றியதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு சேர்த்துக் குடித்தால் சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக