கொள்ளு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - அரை கப்,
காய்ந்த மிளகாய் - 5,
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு,
மிளகு -1 ஸ்பூன்
சீரகம் -1ஸ்பூன்
கருவேப்பில்லை -சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும். பின் மிளகு ,சீரகம் ,கருவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும் .வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும். இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண் டால் அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.
குறிப்பு ;
கொள்ளு உடம்பில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்க மிகவும் உதவும் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக