29 ஆகஸ்ட் 2020

சாமை அரிசி பிரியாணி

                                     

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி -2 கப் 

தக்காளி -2(பொடியாக நறுக்கியது )

தேங்காய் பால் - 1 கப் 

வெங்காயம் – 1 [வெட்டப்பட்டது] 

இஞ்சி & பூண்டு - 1 1/2 டேபிள் ஸ்பூன் [மசித்த] 

வெந்தயம் விதைகள் – 1 டி பிச் 

 ஏலக்காய் - 2 

பட்டை - 1 

கிராம்பு - 2 

பிரியாணி இலை - 1 

கல் பூ - 1 

கரம் மசாலா - 1 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் 

உப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

தண்ணீர் – 1/2 கப்

எண்ணெய் -2 டீஸ்பூன் 

நெய் -2 டீஸ்பூன் 

அரைக்க தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய்  - 2 

 புதினா சிறிதளவு ,

கொத்தமல்லி சிறிதளவு 

ஆகிய வற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும் .

செய்முறை :

முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைக்கவும் . குக்கர் சூடானவுடன் எண்ணெயை  பிரஷர் குக்கரரில் ஊற்றவும் . பின் அதில் பச்சை ஏலக்காய், சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கல் பூ சேர்த்து வதக்கவும்.
பிறகு, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் அரைத்த கொத்தமல்லி, புதினா கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து, நன்கு வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள் , கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு உப்பு மற்றும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பிறகு அதில் சமஅளவு அரிசி சேர்த்து, மூடி வைத்து, 3-4 விசில் வரும் வரை வேக விடவும்.கடைசியில் நெய் மற்றும் புதினா இலைகளை த் தூவி இறக்கவும் . 
சால்னா குர்மா மற்றும் ரைதாவுடன் சேர்த்து பரிமாறவும் .




28 ஆகஸ்ட் 2020

மேக்சிகன் சாதம்

                                                        Spanish Rice in a Bowl


 தேவையான பொருட்கள் :

அரிசி-2 கப் 

முட்டைக்கோஸ் -50 கி 

வெங்காயம் -3 

தக்காளி -2 

பச்சை மிளகாய் -3 

குடைமிளகாய் -1 

பூண்டு பல் -2 

மிளகாய்த் தூள் -1 ஸ்பூன் 

எண்ணெய் -தேவையான அளவு 

நெய் -சிறிதளவு 

உப்பு -தேவையான அளவு 

செய்முறை ;

முட்டைக்கோஸ்,குடைமிளகாய்,வெங்காயம் முதலியவற்றை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும் . தக்காளியை பேஸ்டாக அரைத்துக்  கொள்ளவும் . 

கடாயயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றவும் . எண்ணெய் காய்ந்ததும் நசுக்கிய பூண்டு பல் சேர்க்கவும் . பின் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் . வெங்காயம் பொன்னிறமாக மாறிய உடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும் . 

தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் . பிறகு மிளகாய்த்தூள் சேர்க்கவும் பின்முட்டைக்கோஸ்,குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் . பின் அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு ,நீர் சேர்த்து குக்கரில் வைக்கவும் .

3 விசில் வந்ததும் இறக்கி நெய் சேர்த்து கிளறி பரிமாறவும் . மணமணக்கும் மேக்சிகன் சாதம் ரெடி 

25 ஆகஸ்ட் 2020

இறால் தொக்கு

                                                  

தேவையான பொருட்கள் :

இறால் -1/2 கி 

சின்ன வெங்காயம் -20 

தக்காளி -2 

மிளகாய்த்தூள்-1ஸ்பூன் 

இஞ்சி ,பூண்டு விழுது -1 ஸ்பூன் 

அரைக்க தேவையான பொருட்கள் :

மிளகு -1/4 ஸ்பூன் 

சீரகம் -1/4 ஸ்பூன் 

சோம்பு -1/4 ஸ்பூன் 

மல்லி -1/4 ஸ்பூன் 

தேங்காய் -சிறிதளவு 

எண்ணெய் -தேவையான அளவு 

உப்பு -தேவையான அளவு 

செய்முறை :

முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் .வாணலியில் எண்ணெய் ஊற்றவும் .எண்ணெய் சூடானவுடன் சோம்பு ,நசுக்கிய பூண்டு சேர்க்கவும் . பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் .பிறகு இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து வதக்கி  பின் தக்காளி சேர்த்து வதக்கவும் . தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும் . பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் இறால் சேர்க்கவும் . இப்போது தேவையான அளவு உப்பு சேர்க்கவும் .தேவைப் பட்டால் நீர் சேர்க்கவும் . இப்போது வறுத்து அரைத்த மசாலா கலவையை அதனுடன் சேர்த்து கிளறி மூடி வைக்கவும் . சிறிது நேரம் கழித்து இறால் வெத்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும் . சுவையான இறால் தொக்கு ரெடி 

குறிப்பு ;இறாலை அதிக நேரம் வேகவைக்க கூடாது .அதிகநேரம் வெந்தால் இறால் ரப்பர் போல் ஆகிவிடும் 



21 ஆகஸ்ட் 2020

உடலுக்கு ஊட்டம் தரும் கத்திரிக்காய் பிரியாணி


                                                       Brinjal rice or vangi bhat, traditional dish south India. Rice with egg plant authentic receipies royalty free stock photos

தேவையான பொருட்கள் :

அரிசி -3 கப்
கத்தரிக்காய் -1/2 கி
பெரிய வெங்காயம் -5
தக்காளி -4
பச்சை மிளகாய் -3
தயிர் -1/2 கப்
இஞ்சி,பூண்டு விழுது -1 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
பட்டை ,கிராம்பு -3
மஞ்சள் தூள் -3/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1டீஸ்பூன்
கடலை பருப்பு -1டீஸ்பூன்
ஏலக்காய் -2
கடுகு -சிறிதளவு
பெருங்காயம் -சிறிதளவு
எண்ணெய் -தேவையான அளவு
நெய் -1டீஸ்பூன்
முந்திரி -7
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிள்ளை -சிறிதளவு 

செய்முறை ;

அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிள்ளை. சோம்பு ,பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் போட்டு தாளிக்கவும் . பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் . வெங்காயம் நன்கு வதங்கிய உடன் இஞ்சி,பூண்டு விழுதை சேர்க்கவும் பிறகு பச்சை மிளகாயை சேர்க்கவும் .
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் . தக்காளி நன்கு வதாங்கியவுடன் மிளகாய்தூள் ,மஞ்சள் தூள் ,தயிர்,பெருங்காயம் சேர்த்து வதக்கவும் . பின் கத்தரிக்காய் சேர்க்கவும் . கத்தரிக்காய் சிறிது வதங்கிய உடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்க்கவும் . இப்போது உப்பு சேர்த்து கிளறி முடிவைக்கவும் .
சிறிது நேரம் கழித்து 5 விசில் வத்தவுடன் இறக்கவும் . சிறிது நேரம் கழித்து திறந்து நெய்யில் கடலைப்பருப்பு,முந்திரி சேர்த்து வதக்கி சேர்க்கவும் . சாதம் உடையாமல் கிளறிவிடவும் .
இப்போது கமகமக்கும் கத்திரிக்காய் பிரியாணி ரெடி

04 ஆகஸ்ட் 2020

செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல்

                                                           

தேவையான பொருட்கள் :
சிக்கன் -1/2 கி 
பெரிய வெங்காயம் -1 
இஞ்சி ,பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன் 
தனியா தூள் -1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4  டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் -1டேபிள் ஸ்பூன்
சோம்பு -1/2டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது 
உப்பு -தேவையான அளவு 
எண்ணெய் -தேவையான அளவு 
செய்முறை :
முதலில் சிக்கனை சுத்தம் செய்து நீரில்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும் . பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் . கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் . 
பின்னர் வெங்காயம் சேர்க்கவும் அது நன்கு வதாங்கியவுடன் இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .பின் தக்காளி சேர்க்கவும் . தக்காளி நன்கு வதங்க சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் .
பின் தனியா தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் .மசாலா நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் . பின் சுத்தம் செய்த கோழி துண்டுகளை சேர்க்கவும் .தண்ணீர் விட தேவையில்லை. சிறிது உப்பு சேர்த்து முடிவைக்கவும் . அடுப்பை குறைத்த தீயில் வைக்கவும் . 
சிக்கன் பாதி வெத்தவுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கி இறக்கவும் . நாவில் எச்சில் உறவைக்கும் சுவையான செட்டிநாடு மிளகு சிக்கன் வறுவல் ரெடி .

03 ஆகஸ்ட் 2020

மாப்பிள்ளை சொதி

     
                                           Delicious Homemade Muringakka Manga Curry. Drumsticks And Mango in Coconut milk gravy with spices, served in a clay pot.Kerala cuisine stock photography

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு - 100 கிராம் 

பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, நறுக்கிய முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப் 

சின்ன வெங்காயம் - 12 
தேங்காய் - ஒன்று 
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் 
இஞ்சி - சிறிய துண்டு 
பூண்டு - 8 பல் 
பச்சை மிளகாய் - 6, 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லித் தழை - சிறிதளவு 
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் 
நெய்-தேவைக்கேற்ப, 
எண்ணெய்-தேவைக்கேற்ப, 
உப்பு - தேவைக்கேற்ப, 
செய்முறை
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பாசிப் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். 
தேங்காயைத் துருவி அரைத்து, முதலில் வடிகட்டிய பாலைத் தனியாகவும், இரண்டாவதாக வடிகட்டும் பாலைத் தனியாகவும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
மண் சட்டி அல்லது அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் இரண்டாம் தேங்காய்ப்பாலை அதில் சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். 
காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு, முதல் தேங்காய்ப்பாலைச் சேர்த்து, நன்றாகக் கொதித்து நுரைத்து வந்ததும் இறக்கி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து, சேர்த்துக் கலந்து பரிமாறவும்.