செய்ய தேவையானப் பொருட்கள் :
காளான் -200கி
வெங்காயம் -2
பூண்டு -5(பொடியாக நறுக்கியது )
சோம்பு -1(மேஜைக்கரண்டி )
கறிவேப்பிலை -சிறிதளவு
இஞ்சி ,பூண்டு விழுது -சிறிதளவு
மிளகாய் தூள் -1ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
மிளகு தூள் -1/2ஸ்பூன்
சீரக தூள் -1/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
முதலில் கடாயில் சிறிதளவு எண்ணெய் உற்றி எண்ணெய் காய்ந்தவுடன் சிறிதளவு சோம்பு சேர்க்கவும் .பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் .பூண்டு நன்கு வதங்கியவுடன் கருவேப்பிலை சேர்க்கவும்
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வெங்காயம் சிறிது வதங்கியவுடன் இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பொன்னிறமாக கலர் மாறும் வரை வதக்கவும் .பின் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் .
பிறகு காளான் சேர்க்கவும் . அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும் .அடுப்பை குறைத்த தீயில் வைக்கவும் .இதனுடன் நீர் சேர்க்க கூடாது .
காளானில் நீர் உள்ளதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை .சிறிது நேரம் கழித்து காலனை கிளறி அதனுடன் சிறிதளவு மிளகு தூள் ,சீரகத்தூள் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும் .சுத்தமாக நீர்வற்றிய நிலையில் எடுக்கவேண்டும் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக