தேவையான பொருள்கள் :
கோழி கறி -1/2 கி
வெங்காயம் பெரியது -1
தக்காளி -2(விழுதாக அரைத்து கொள்ளவும் )
மிளகாய் தூள் -2 தேக்கரண்டி
மல்லித்தூள் -1தேக்கரண்டி
இஞ்சி ,பூண்டு விழுது -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
தயிர் -100 கி
உப்பு -தேவையான அளவு
பட்டை -1 துண்டு
கிராம்பு -2
ஏலக்காய் -2
பிரியாணி இலை -1
கரம்மசாலா பவுடர் -1/2ஸ்பூன்
கொத்தமல்லி தலை -சிறிதளவு
செய்முறை :
முதலில் 1/2கி கோழி கறியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் .
அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மிளகாய் தூள் ,மஞ்சத்தூள் ,தயிர் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும் .
பின் கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்த வுடன் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் ,பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் .
நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியை அரைத்து அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் .
பின் ஊற வைத்த கோழி கறியை அதனுடன் சேர்த்து வதக்கவும் .பின் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 டம்ளர் நீர் சேர்த்து கிளறி மூடிவைக்கவும்
கறி நன்கு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் .
சுவையான மசாலா கோழிக்கறி ரெடி .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக