தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு -2கப்
சர்க்கரை -1/2 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
வெண்ணெய் -சிறிதளவு
செய்முறை ;
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும் பின் அதனுடன் சர்க்கரை, வெண்ணெய் ,உப்பு,தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக பிசையவும். 10 நிமிடம் தொடர்ந்து மாவை பிசையவும் .மாவு மிருதுவாகும் வரை பிசைத்த பிறகுமாவு காயாமல் இருக்க அதன் மீது சிறிது எண்ணெய் தடவவும் .
.
பின் 1 அல்ல்து 2 மணி நேரம் மூடி ஊறவைக்கவும் .அதன்பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பின் உருட்டிய உருண்டைகள் மீது 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி உருட்டி வைக்கவும் .
அதன் பிறகு உருட்டிய உருண்டைகளை மிக மெல்லியதாக தேய்த்துக் கொள்ளவும் .தேய்த்த மாவின் மீது எண்ணையை தடவ வேண்டும் .பின் அதனை விசிறி மடிப்பாக மடித்து கொள்ள வேண்டும் .பின் படத்தில் உள்ளது போல் சுற்றிக் கொள்ளவும் .
வட்டமாக சுற்றிய மாவை பரோட்டா வடிவத்திற்கு தேய்த்து கொள்ளவும் .
பின் அதை தவாவில் இட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் திருப்பி போடவும் .இரண்டு பக்கமும் நன்கு சிவந்து வரும் வரை வைத்திருந்து பின் எடுக்கவும் .
இப்போது மிருதுவான சுவையான கோதுமை பரோட்டா தயார் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக