04 ஜனவரி 2021

உடல் எடையை குறைக்கும் முலைக் கட்டிய பயறு சாலட்

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும். 
வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும். * இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு -50 கி 
கேரட் -1 
வெள்ளரிக்காய் -1 
எலுமிச்சம் பழம் -1/2 மூடி 
இஞ்சி-ஒரு சிறிய துண்டு 
வெங்காயம் -1 
மிளகு தூள் -1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி -சிறிதளவு 
உப்பு -தேவையான அளவு 
செய்முறை :
பயிரை ஒரு நாளுக்கு முன்பே வரவைகக்கவும் . அடுத்தநாள் அதில் உள்ள நீரை நன்றாக வடித்து விட்டு காற்று புகாதவாரு ஒரு சுத்தமான துணியில் கட்டி வைக்கவும் . மறுநாள் பயறு நன்றாக முளைத்திருக்கும் .
பின் அதனுடன் கேரட் ,வெள்ளரிக்காய் ,இஞ்சி,வெங்காயம்,ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும் . 
பின்  அதனுடன் மிளகு தூள்,உப்பு,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் சாப்பிடவும் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக