05 நவம்பர் 2020

ரிங் முறுக்கு


தேவையான பொருட்கள்

அரிசி மாவு -1 டம்ளர்

தண்ணீர் -1 டம்ளர்

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

ஒமம் -சிறிதளவு

சீரகம் -1/2 ஸ்பூன்

பெருங்காயத்தூள் -சிறிதளவு

எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

தேவையான எல்லாவற்றையும் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடேற்றவும். பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள், ஓமம், சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும் நன்றாக கொதித்த பின்பு அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கிளறிய பின்பு வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவு பிசைவது போல் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

மாவை சிறிதளவு எடுத்து உருட்டிக் கொள்ளவும். நீளவாக்கில் தேய்த்து ஒரு விரலை நடுவில் வைத்து ரிங் வடிவில் உருட்டிக் கொள்ளவும் . பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடு ஏறவும் ரிங் வடிவ முறுக்கை அதில் போட்டு பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பான சுவையான ரிங் வடிவ முறுக்கு தயார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக