31 ஜூலை 2020

வெஜிடபுள் புலாவ்



                                            Shai Pulao or Vegetable Rice. Or Indian Vegetable Biryani stock photography

தேவையான பொருள்கள் : 

பாஸ்மதி அரிசி -1/2 கப் 
தண்ணீர் - 1 கப் 
கேரட் , பீன்ஸ் , பச்சை பட்டானி , உருளைக் கிழங்கு - 1 கப் 
பச்சை மிளகாய் -2 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
 பெரிய வெங்காயம் -1 (நறுக்கியது ) 
ஏலக்காய் - 2 
முந்திரி -10 
எண்ணெய் -3 ஸ்பூன் 
சோம்பு - 1/2 ஸ்பூன் 
பிரியாணி இலை - சிறியது 
கிராம்பு -2 
இலவங்கப்பட்டை - சிறியது 
கொத்தமல்லி இலை - சிறிது
நெய் -3 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி பின்னர் 30 நிமிடம் தண்ணீரில் ஊரவைக்கவேண்டும் .
                                                  Closeup flat top lay view down of soaked rice, grain, cloudy liquid water in glass bowl on wooden background. Closeup flat top lay view down of soaked rice stock photography
 காய்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும். காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு , இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரியாணி இலை , ஏலக்காய் போடவும் . 
                                             
பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் . வெங்காயம் வதங்கியவுடன்  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ,பின்னர் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பின்னர் உப்பு சேர்த்து 5 நிமிடம் காய் வனங்கும் வறை விடவும் .
                                                 
 பின்னர் ஊர வைத்த அரசியை வடித்து குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு வதக்கிய காய்கறிகளை சேர்த்து 1 விசில் வந்தவுடன் இறக்கவும் . 
                                    
கொத்தமல்லி இலை தூவி கிளறி விடவும் . சூடான சுவையான வெஜிடபுள் புலாவ் தயார் .
                                     Indian vegetable pulao dish with rice and vegetables. The Indian vegetable pulao is rice seasoned with vegetables and spices and is a healthy comfort food served stock photos

30 ஜூலை 2020

முருங்கைக் கீரை சாதம்


                                  

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி -ஒருகப், 
துவரம்பருப்பு-1/4கப்
முருங்கைக்கீரை-1/2கப்
பெரிய வெங்காயம்-2 
உளுத்தம் பருப்பு-3டடீஸ்பூன்
பொட்டுக்கடலை-2டடீஸ்பூன்
பச்சரிசி-2டடீஸ்பூன்
காய்ந்தமிளகாய்-3
தெங்காய் துருவல்.-2டடீஸ்பூன்
எண்ணெய்-தேவையானஅளவு
கடுகு-1/2ஸ்பூன்
காய்ந்தமிளகாய்-2
நெய்-2டடீஸ்பூன்
உப்பு-தேவையானஅளவு

                                               

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவேண்டும். 
வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். 
உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை,பச்சரிசி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து , பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும். கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.
கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.