14 மே 2020

மீன் குழம்பு


                                                
செய்ய தேவையான பொருட்கள்:
மீன் -1/2கி
சின்ன வெங்காயம்-200கி(பாதி ஒன்று ,இரண்டாக இடித்து கொள்ளவும் )
பூண்டு -10 பல் (ஒன்று ,இரண்டாக இடித்து )
தக்காளி-2
புளி-100கி
பச்சை மிளகாய்-2
மிளகாய் தூள்-2ஸ்பூன்
மல்லி தூள் -3ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4ஸ்பூன்
நல்லெண்ணெய் -100கி
கருவேப்பில்லை -சிறிதளவு
வெந்தயம் -1/4ஸ்பூன்

செய்முறை :
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும் .
                                        

பின் ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி  எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் ,கருவேப்பிலை சேர்க்கவும் .அதன் பின் நறுக்கிய பூண்டு சேர்க்கவும் .பூண்டு வதங்கியவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் .வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் .
                                      
பின் பச்சை மிளகாய் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .
                                         
நன்கு வதங்கியவுடன் மஞ்சத்துள்,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் சேர்த்து வதக்கவும் .
                                       
நன்கு வதங்கி எண்ணெய் பிரித்து வரும் பொது புளி கரைசலை சேர்க்கவும் .பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கலத்து முடி வைக்கவும் .
                                        
நன்கு கொதித்து விடவும் .புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும் .பின் அதில் மீன் சேர்க்கவும் .
                                         
மீன் சேர்த்து 2 நிமிடம் கழித்து இடித்து வைத்த வெங்காயத்தை சேர்த்து  2 நிமிடம் கழித்து இறக்கி கருவேப்பில்லை இலை சேர்த்து இறக்கவும் .சுவையான மீன் குழம்பு ரெடி .